Ads (728x90)

உலகளாவிய பயண தளமான பிக் 7 டிராவல் தொகுத்த "உலகின் 50 சிறந்த தீவுகள்" பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்து உலகின் மிக அழகான தீவாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் உலகின் மிகவும் அழகான தீவுகள் இனம் காணப்பட்டுள்ளது.

இலங்கை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தீவு தேசத்தின் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் துடிப்பான உள்ளூர் அனுபவங்களுக்காகவும் இந்தப் பட்டியல் இலங்கையை எடுத்துக்காட்டியது.

2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இலங்கை, மூரியா பிரெஞ்சு பாலினீசியா, சோகோத்ரா, ஏமன் மதீரா கலாபகோஸ், ஈக்வடார் கிரேட் எக்ஸுமா, பஹாமாஸ் சீஷெல்ஸ் அச்சில் தீவு, அயர்லாந்து கோலிப், தாய்லாந்து மிலோஸ், கிரீஸ் ஆகியன முறையே முதல் 10 இடங்களை பெற்றுள்ளன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget