விமான பயணிகளின் நட்பு ரீதியான விருந்தோம்பல், விரிவான விமான வலையமைப்பு நேரடி விமானங்கள் மற்றும் தடையற்ற இணைப்பு காரணமாக இலங்கை விமானப் பயணிகளின் சிறப்பான தேசிய விமான நிறுவனம் என்ற நிலையை இந்த அங்கீகாரத்தின் மூலம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
விமான நிறுவனம் அதன் பயணிகளுக்கு இணையற்ற விருந்தோம்பல், அவர்களின் ரசனைக்கு ஏற்ற சர்வதேச மற்றும் உள்ளூர் உணவு வகைகள் மற்றும் அவர்களின் இலக்குக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் கொழும்பிலிருந்து வாரந்தோறும் சுமார் 300 நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கிறது. இதன் சேவை 59 நாடுகளுக்கும் 113 இடங்களுக்கும் வழங்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து நேரடி விமானங்கள் மற்றும் அவர்களின் இடங்களுக்கு தடையற்ற இணைப்பைத் தேடும் பயணிகளுக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முதல் தேர்வாக மாறியுள்ளது.
Post a Comment