இதுவரை உள்ளக விளையாட்டரங்குகள் நிர்மாணிக்கப்படாத பகுதிகளில் உள்ளக விளையாட்டரங்குகளை அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உள்ளக அரங்கு இல்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் அதுதான் உண்மை. எனவே இந்த வருடம் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிககளில் உள்ளக விளையாட்டு அரங்குகளை நிர்மாணிப்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
நாடு முழுவதும் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வருடம் 100 விளையாட்டரங்குகளின் மேம்பாட்டுப் பணிகளை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கி 2 உயர்தர செயற்கை ஓடு பாதைகளை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கண்டியில் ஒரு செயற்கை ஓடுபாதை மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, மற்றொன்று கிளிநொச்சி அல்லது அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்படும்.
பாடசாலைகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் விளையாட்டுத்துறை உபகரணங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தரமான மைதானங்களை நிர்மாணிப்பது அத்தியாவசியமாகும். அதன் மூலம் இளம் சமுதாயத்தினரின் ஆற்றல்களை அதிகரிக்கச் செய்து சர்வதேச அரங்கில் பிரகாசிக்க செய்யமுடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment