ஆனால் அது இலகுவான விடயமல்ல என்பதையும் நான் அறிவேன். அரச அதிகாரிகளிடம் அரசாங்கமே விசாரணையை முன்னெடுக்கும் பலவீனமான நிலை உருவாகியுள்ளது. இது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் இந்த விடயத்தில் நியாயம் நிலைநாட்டப்படும் எனவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவத்தார்.
நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித் பல தசாப்தங்களாக தம்மை அர்ப்பணித்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு, தம்மீதான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாடுபடுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக விசாரணை செய்ய வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய பொறிமுறையினூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment