இந்த வீடுகள் மாநிலம் முழுவதும் பரவியுள்ள இலங்கைத் தமிழ் முகாம்களில் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2021 ஆகஸ்ட் மாதம் மாநில சட்டமன்றத்தில் விதி 110 இன் கீழ் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் பரந்த மறுவாழ்வு முயற்சியின் ஒரு பகுதியாகும்.
அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின்படி 35 மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 180.34 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் 3,510 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் 2,781 வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த முகாம்களில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதில் புதிய உள் வீதிகள், மேம்படுத்தப்பட்ட மின்சார இணைப்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக வசதிகள் ஆகியவை அடங்கும்.
Post a Comment