Ads (728x90)

ஜனாதிபதி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பேஸ்புக் கணக்கொன்றின் மூலம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் படத்தையும், ஜே.வி.பியின் பின்னணியையும் பயன்படுத்தி போலியான காணொளியை அவர் வெளியிட்டுள்ளார்.

இது வெளிளிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி.யின் நற்பெயருக்கு சேதம் விளைவித்துள்ளது. 

 இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காணொளி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக ஜேவிபி பின்னணியில் அமைச்சர் விஜித ஹேரத்தை ஒத்த ஒரு படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனுடன் அவதூறான கருத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சர் விஜித ஹேரத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சமிந்த ஜெயநாத, இது தொடர்பாக உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு கணக்கு வைத்திருப்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget