நேற்று மல்வத்து அஸ்கிரி விஹாரையில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடியதாகவும், அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் புதிய காவல்துறை மாஅதிபர் தெரிவித்தார்.
பொதுமக்கள் WhatsApp வழியாக அனுப்பும் முறைப்பாடுகளில் ஒரே நாளில் சுமார் 2,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment