Ads (728x90)

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் எனவும், அதற்காக கைது செய்யப்படுவது அரசியல் பழிவாங்கலாக அமையாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. முறையான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் தகுதி, தராதரம் பாராது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. 

இதனிடையே ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்குமாறு அரசாங்கத்துக்கு எந்தவித இராஜதந்திர அழுத்தமும் கொடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் அல்ல என்று கூறினார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget