Ads (728x90)

உரிய முறையில் விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல் பணிக்கு சமூகமளிக்காத, அஞ்சல் ஊழியர்களின் ஆகஸ்ட் மாத வேதனம் நிறுத்தப்படும் என நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் தொழிற்சங்கங்களினால் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். 

அஞ்சல் உத்தியோகத்தர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பணி நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget