Ads (728x90)

2015 மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று அழைப்பாணை அனுப்பியுள்ளது. 

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு சமர்ப்பித்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget