Ads (728x90)

கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் ‘சயுர’விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் இன்று குடாவெல்லையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாழும் சவால்களை சுட்டிக்காட்டினார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது கடற்றொழில் சமூகத்திற்கு வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதியான ஆயுள் காப்புறுதித் திட்டத்தை ஸ்தாபித்தல் இன்று குடாவெல்லையில் யதார்த்தமாகியுள்ளது என்று பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். 

இந்த புதிய காப்புறுதித் திட்டத்தின் மூலம் இதுவரை இல்லாத சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்றும், 1.2 மில்லியன் ரூபா முதல் 2 மில்லியன் ரூபா வரையிலான சலுகை மட்டங்களின் கீழ் ஏதேனும் ஊனம், பகுதி அல்லது முழுமையான செயலிழப்பு, மரணம் அல்லது காணாமல் போதல் போன்ற சந்தர்ப்பங்களில் கூட நிவாரணம் கிடைக்கும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

இதன்மூலம், கடற்றொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உண்மையான பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget