Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ருக்‌ஷான் பெல்லனா மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பதில் அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த பல தகவல்கள் போலியானவை. இவரது நடத்தை மருத்துவ கோட்பாட்டுக்கும், நாட்டின் பொதுச்சட்டத்துக்கும் முரணானது. இவருக்கு எதிராக நிச்சயம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நோயாளி ஒருவர் எவ்வாறான பதவி நிலைகளில் இருந்தாலும் அவரது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த கூடாது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளருக்கு அவ்வாறான அதிகாரம் கிடையாது எனவும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget