Ads (728x90)

அபுதாபியில் 16 ஆம் திகதி இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளம் துடுப்பாட்ட வீரர் தான்சித் ஹசன் 52 ஓட்டங்கள் எடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget