Ads (728x90)

"சட்டத்தைப் பேணுவோம் - சமாதானத்தைப் போற்றுவோம்" என்ற தொனிப்பொருளில் இன்று பிற்பகல் திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் 159 ஆவது பொலிஸ் தினம் நடைபெற்றது.

எந்தக் குற்றத்தையும் காலத்தின் போக்கில் மறைவதற்கு இடமளிக்க மாட்டேன் என்றும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் காலம் ஒரு தடையல்ல என்றும், தங்கள் கடமைகளை முறையாகச் செய்யும் பொலிஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று ஒரு சமூக சவாலாக இருக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றங்களைத் தடுக்க பொலிஸ் திணைக்களத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மூத்த டி.ஐ.ஜி ரவி செனவிரத்ன, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பல மூத்த மற்றும் இளைய பொலிஸ் அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget