Ads (728x90)

உலகளாவிய பயண சஞ்சிகையான ”டைம் அவுட்” (Time Out) இவ்வாண்டு வெளியிட்டுள்ள ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

”டைம் அவுட்” சஞ்சிகை, இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, கலாசார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகைப் பாராட்டியுள்ளது.

மேலும் அக்டோபரில் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இடமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

தங்க கடற்கரைகள், மலை நடைகள், பழங்கால இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சபரிகள் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை வழங்கும் ஒரு தீவாக இலங்கை இங்கு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியவை இலங்கைக்குப் பிறகு பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

அதே நேரத்தில் ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா போன்ற இடங்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget