Ads (728x90)

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த 21 மாத காலத்தில் ரமித் ரம்புக்வெல்ல 27 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியுள்ள நிலையில், அதனை ஈட்டிய விதம் குறித்த தகவலை வௌிப்படுத்த தவறியமைக்காகவே அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறு ஈட்டப்பட்ட சொத்துக்களில் சொகுசு வீடு மற்றும் ஜீப் ரக வாகனம் உள்ளிட்ட மேலும் பல சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்புத்தொகைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது. 

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகவும் ரமித் ரம்புக்வெல்ல பணியாற்றியிருந்தார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget