Ads (728x90)

பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்கும், பாதாள குழுக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு. கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கெஹல்பத்தரே பத்ம, கமாண்டர் சலிது உள்ளிட்ட பாதாள குழுவினர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் பிரதான நபர்களாக செயற்பட்ட கெஹல்பத்தரே பத்ம, கமாண்டர்  சலிது உட்பட குற்றவாளிகள் ஐந்து பேரை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பாதுகாப்பு தரப்பினர் எவ்விதமான அரசியல் தலையீடுமில்லாமல் செயற்பட்டதன் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் தான் பாதாள குழுவினர்கள் செயற்பட்டனர். அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பாதாள குழுக்களை பயன்படுத்திக் கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget