இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment