Ads (728x90)

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று உத்தரவிட்டது.

அதன்படி ஒவ்வொரு பிரதிவாதியும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர்.

பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதிமன்றம் அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடரப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget