Ads (728x90)

யாழ்ப்பாண பொது நூலகத்தை இலத்திரனியல்  நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொது நூலகத்திற்காக jaffna.dlp.gov.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒன்லைன் ஊடாக வாசிக்க வாய்ப்பளிக்கும்.

யாழ்ப்பாண மக்களின் பெருமையின் அடையாளமாக விளங்கும் யாழ்ப்பாண பொது நூலகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகங்களின் தொகுப்பைக் கொண்ட நூலகமாகும். 

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான மக்களால் தினமும் பயன்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு ஒருங்கிணைந்த நூலக முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் அட்டை பிரவேச  வசதி மற்றும் விசேட தேவை உள்ளவர்களுக்கு உதவி தொழில்நுட்பத்துடன் கூடிய விசேட அலகும் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

2025 வரவு செலவுத் திட்டத்தில்  இந்தத் திட்டத்திற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால,  பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget