Ads (728x90)

ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை நேற்று  பிற்பகல் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதிகளில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளரிடம் ஜனாதிபதி விரிவாக விளக்கியுள்ளார்.

அத்திட்டங்களை பொதுச்செயலாளர் குட்டெரெஸ் பாராட்டியதோடு, அவற்றுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget