Ads (728x90)

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட சத்திரசிகிச்சை மற்றும் கிளினிக் பல்நோக்கு கட்டடம் நேற்று முன்தினம் மக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

ஒரு பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் வசதிகள், மருந்துக் களஞ்சியம், சத்திர சிகிச்சைக் கூடம், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் சத்திர சிகிச்சை வாட்டுத்தொகுதி, மிதுரு பியச, பிசியோதெரபி பிரிவு, இரத்த வங்கி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

இந்நிகழ்வில் கிராமப்புற அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் எம்.பி. ஏ. ஆதம்பாவா, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வசீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பி.எஸ். எம். விமலரத்ன, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நிதின் ரணவக்க, அம்பாறை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget