வளமான நாடு - அழகான வாழ்க்கையை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி நிலைபேறான, நவீன மற்றும் தரப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து கட்டமைப்புடன் கூடிய அழகான வாழ்க்கை முறையை அடைவதற்காக இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் Clean Sri Lanka வேலைத்திட்டம், தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO Engineering) அரச - தனியார் பங்களிப்பின் கீழ் நாட்டில் 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்கும் சுத்தமான, அழகான புகையிரத நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து மருதானை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

Post a Comment