Ads (728x90)

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த மறக்க முடியாத 2025 ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா 331 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 330 ஓட்டங்களை பெற்றது. 

ஸ்மிருதி மந்தனா 80 ஓட்டங்களையும், பிரதிகா ராவல் 75 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியாவின் இன்னிங்ஸ் 330 ஓட்டங்களில் முடிந்தது.

இந்த மிகப்பெரிய இலக்கை மூன்று விக்கெட்டுகள் மற்றும் ஆறு பந்துகள் மீதமிருந்த நிலையில் 331 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது. 

அவுஸ்திரேலியா அணி தலைவி அலிசா ஹீலி 107 பந்துகளில் 142 ஓட்டங்களை எடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் 331 ஓட்டங்கள் என்ற இலக்கு, இலங்கையின் முந்தைய சாதனையான 2024 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த 302 ஓட்டங்களை முறியடித்தது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget