இதன்படி இன்றைய தினத்துக்குப் பின்னர் விண்டோஸ் 10 இயங்கும் சாதனங்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்புப் புதுப்பிப்புகள், தொழில்நுட்பத் திருத்தங்கள் அல்லது புதிய அம்சங்கள் எதுவும் கிடைக்காது.
உலகெங்கிலும் உள்ள 41% நிறுவனங்கள் இன்னும் விண்டோஸ் 10 இயங்குதளத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பயனர்களை விண்டோஸ் 11 இற்கு மேம்படுத்துமாறு (Upgrade) வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும் எல்லா கணனிகளிலும் அந்த மேம்பாட்டை மேற்கொள்ள முடியாது.
இத்தகைய பயனர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பெற, லினக்ஸ் அல்லது குரோம் ஓஎஸ் (Chrome OS) போன்ற மாற்று இயங்குதளங்களுக்கு மாறுவது நல்லது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
.jpg)
Post a Comment