Ads (728x90)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா 107 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட போதிலும் பெத் மூனி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.

பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலனா கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சித்ரா ஆமின் 35 ஓட்டங்களையும், ரமீன் ஷமின் 15 ஓட்டங்களையும், அணித் தலைவி பாத்திமா சானா 11 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 19 ஓட்டங்கள் கிடைத்தது.

பந்துவீச்சில் கிம் கார்த் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், அனாபெல் ஷூட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், மெகான் ஷூட் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget