Ads (728x90)

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை செப்டம்பரில் 2018 ஆம் ஆண்டில் பதிவான முந்தைய சாதனையை முறியடித்து, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டின் நாட்டிக்கு வந்த 149,087 சுற்றுலாப் பயணிகளின் அளவை விட அதிகமாகும்.

இது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 30.2 சதவீதம் அதிகரிப்பைக் காட்டுகிறது.

இதன்படி 2025 ஆம் ஆண்டு இதுவரை இந்தியாவில் இருந்து 49,697 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 10,752 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 10,527 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 9,344 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து 9,105 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை 1,725,494 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget