Ads (728x90)

2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் கூடியபோது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஆரம்பப் பிள்ளைப் பருவ பாடத்திட்ட கட்டமைப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், சுமார் 19,000 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு மாகாணத்திலும் ஆசிரியர் பயிற்சி நடத்தப்படும் என்றும், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி கற்பித்தல் செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும், எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். 

கல்வி முறையின் தரமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget