அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் சீர்த்திருத்த திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இலங்கை அதிகாரிகளால் செயற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மீட்சியைத் தொடர்ந்து ஆதரித்துள்ளன என்றும், பணவீக்கம் இலக்கை நோக்கி முன்னேறுதல், இருப்புக்கள் குவிதல் மற்றும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் வருவாய் திரட்டல் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாகச் செயற்பட்டன என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவால் மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கை சுமார் 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற உள்ளது.

Post a Comment