Ads (728x90)

இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரி விழா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவும் கலந்து சிறப்பித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரவின் ஏற்பாட்டில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget