Ads (728x90)

வசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

அனுராதபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தார்கள் எனவும், அவர்கள் குற்றங்களை மூடி மறைத்தனர் எனவும் அவர் தெரிவித்தார். 

வசிம் தாஜுதீன் 2012 இல் கொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பத்திர மோசடி இடம்பெற்றது. 2019 இல் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் இடம்பெற்றது.

இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராயினும் சட்டம் செயல்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget