Ads (728x90)

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த மாத்திரைகள் மற்றும் வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கற்பிட்டியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget