Ads (728x90)

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நம்பிக்கையைக் கட்டியெழுப்பியுள்ளது என்று சர்வதேச நாணயநிதியத்தின் ஆலோசகரும், பணிப்பாளருமான டோபியாஸ் அட்சியன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முற்போக்கு மற்றும் சந்தைக்குள் நுழையும் வாய்ப்பு இந்த வருடத்தில் உயர்மட்டத்தில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆழமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கையில், வலுவான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சிறந்த பொது முதலீட்டு மேலாண்மை என்பன அவசியமாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்ளிங் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். 

நாட்டின் தற்போதைய தேவை, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலம், மீள் தன்மையை உருவாக்குவதே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

அந்த வகையில், இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ள அவர், சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் வகுக்கப்பட்ட அளவுகோல்களுடன் தொடர்ந்து முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget