Ads (728x90)

மக்கள் விரும்பாத எந்தவொரு சட்டத்தையும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். 

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 28ஆவது மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தண்டனைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மட்டுமே கொண்டு வரப்பட்டது என்றும் மக்கள் இதை நிராகரித்தால், அது ஒருபோதும் சட்டமாக அமுல்படுத்தப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சட்டங்கள் ஆட்சியாளர்களுக்காக அல்ல, மக்களுக்காகவே இயற்றப்படுகின்றன என்று ஜனாதிபதி தெரிவித்தார். 

சட்டங்கள் மட்டுமல்ல, அரசியல் அமைப்பே ஆட்சியாளர்களின் நலனுக்காகத் திருத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு ஒருபோதும் செய்யாது என்றும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் வர்த்தகம் என்ற இரும்பு கதவினை திறந்துள்ளோம். இதன் விளைவை நன்கு அறிவோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன். 

சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் இந்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

ஆசிரியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதுடன், நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கும் தீர்வு காண வேண்டும். 

ஆசிரியர் சேவையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வினை நிச்சயம் வழங்குவோம். புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவற்கு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் மக்கள் எமக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள். ஆகவே அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது எமது பொறுப்பு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget