கண்டியில் நடைபெற்ற இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய சட்ட மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பதிவாளர் நாயகம் காரியாலயம், குடிவரவு குடியல்வு காரியாலயம், நீர் மற்றும் மின்கட்டணம் போன்றவை டிஜிற்றல் மயமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நீதிமன்ற கட்டமைப்பு இன்னும் கைகளாலும் ஆவணங்களின் அடிப்படையிலுமே செயற்பட்டு வருகிறது.
8,000 பக்கங்களைக்கொண்ட வழக்கு ஆவணம் ஒன்றை ஒரு தரப்புக்கு அதை நகல் எடுப்பதற்காக ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் என்னிடம் சொன்னார்.
அந்த வழக்கின் ஆவணங்களுக்கான மொத்தச் செலவு 3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகச் செலவாகியுள்ளது. இவ்வாறான செலவுகள் காரணமாக அதிகமானவர்கள் வழக்குத்தொடுக்க பின்வாங்குகின்றனர்.
இதன்மூலம் வழக்குத் தொடுப்பவர்களுக்கான செலவும் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் டிஜிற்றல் மயப்படுத்துவதே எமது நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் நிதி ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தக் காலாண்டில் குறைந்தபட்சம் 50 அல்லது 60 நீதிமன்றங்களை டிஜிற்றல் மயப்படுத்துவதுடன், ஏனைய நீதிமன்றங்களை அடுத்த வருடத்தில் டிஜிற்றல் மயப்படுத்துவோம் என்றார்.
.jpg)
Post a Comment