இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 60/L.1/Rev.1 தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் திருத்தப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன.
குறித்த புதுப்பிக்கப்பட்ட வரைவு கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்தின் முக்கிய அனுசரணையாளர்களாக பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன.இந்நிலையில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.


Post a Comment