Ads (728x90)

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் அதிகாரிகள் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக பிரதி பொலிஸ் அத்தியட்சகரும், ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வூட்லர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார். பாரபட்சமற்ற விசாரணைக்காக அந்த அதிகாரி மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் அதிகாரி ஒருவர் இந்த சட்டவிரோதப் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவியதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஊடகப் பேச்சாளர் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால் எந்தவொரு நபரும் பதவியைப் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். பொலிஸ் மாஅதிபர் இது குறித்து தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

கடல் வழியாக அதிக அளவில் ஐஸ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget