இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதேநேரம் அவுஸ்திரேலிய அரசாங்கம் சார்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக பதவி ஏற்கவிருக்கும் மெத்திவ் டக்வர்த் கையொப்பமிட்டார்.
இதன்மூலம் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், அதன் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டமுடிந்துள்ளது.
அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இணங்க, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை சரியான நேரத்தில் முடிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த ஒப்பந்தங்கள் பிரதிபலிக்கின்றன.
ஆக்கப்பூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஊடாக, நிலுவையில் உள்ள கடன்களை மறுசீரமைப்பதன் மூலம் இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணங்கியுள்ளது.

Post a Comment