மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதின.
இதன்படி போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்படி தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
299 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது
இதன்படி 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Post a Comment