சிங்களம், பாலி, சமஸ்கிருதம் மற்றும் பௌத்த தர்மம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பட்டப்படிப்பை நோக்காகக் கொண்டு பிக்குகளுக்குத் தேவையான கல்வியை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. சமகாலத்திற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு என்பனவும் வழங்கப்படுகின்றன.
களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘யெலசிய அபிமன்’ நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
வித்யாலங்கார பிரிவேனாவின் புதிய இணையத்தளத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். ‘யெலசிய அபிமன்’ கல்வித் தொகுப்பு மற்றும் நினைவுத் தொகுப்பு என்பன ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.2025 இல் தொடங்கிய இந்தப் பிரிவேனாவின் நிர்மாணப் பணிகள் 20 ஆண்டுகளாக நிறைவு செய்யப்படவில்லை. மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அறிவு கொண்ட ஒரு நாட்டில் ஒரு கட்டடத்தைக் கட்டித் திறக்க 20 ஆண்டுகள் தேவைப்படும் என்றால், நாம் எந்தளவு கீழ் மட்டத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
2005 இல் செலவிடப்பட்ட பணத்தின் பயன்கள் 2025 தான் கிடைக்கிறது என்றால் பொதுமக்களின் பணத்துக்கு நாம் நியாயத்தை நிலைநாட்டவில்லை. அரச பொறிமுறையில் உள்ள திறமையின்மை, குழப்பகரமான தன்மை என்பவற்றை ஒவ்வொன்றாக தீர்க்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை அமைச்சர் ஹினிதும சுனில் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கம்பிகள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்தளவு புனிதமான இடத்தில் உள்ள கம்பியை பாதுகாக்க முடியாவிட்டால், நாடு எங்குள்ளது?
போதைப்பொருள்தான் இதற்கு முக்கிய காரணம். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ளள கம்பியைப் பாதுகாக்க அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள யானைகள் வேலியில் வைக்கப்பட்டுள்ள பெட்டரி திருடப்படுகிறது.எனவே இந்தக் கட்டடத்தில் உள்ள பாரிய கம்பி வெட்டப்பட்டதன் பின்னணியில் உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒரு அரசாங்கமாக, நமக்கு ஒதுங்க முடியாத பொறுப்பு உள்ளது.
இந்த போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். இந்த போதைப் பொருட்கள் நாம் நினைத்துப் பார்க்காத துறைகளுக்கும் பரவியுள்ளன. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக அரசியல் மற்றும் வாதங்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த பேரழிவைத் தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். கிராமத்திற்கும், விகாரைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை தகர்க்க முடியாது. கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மிக உறவும் வரலாற்று பாரம்பரியமும் உள்ளது. இந்த சமூகத்திற்கு மீண்டும் பிக்குவின் மரபு தேவை. இந்த நாட்டுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு பேரழிவிலும், பிக்குகள் முன்வந்து செயற்பட்டுள்ளனர்.
நாட்டுக்கும் மக்களின் நலனுக்காகவும் அவர்கள் எவ்வளவு பணியாற்றியுள்ளனர்? நமது நாட்டை மீட்டெடுக்க அத்தகைய பிக்குமார்களின் தலையீடு அவசியம். அந்தத் தலையீட்டைச் செய்ய நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.
அமராபுர மகாநிகாயவின் மகாநாயக்க தேரர், அதி வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரர், ராமான்ய மகாநிகாய மகாநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய மகுலேவே விமல தேரர், அமெரிக்காவின் வொஷிங்டன் மேரிலாந்து விகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய கட்டுகஸ்தொட்ட உபரதன நாயக்க தேரர், பிரபல நடிகர் ரவீந்திர ரந்தேனிய, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் தர்ஷன ரத்நாயக்க ஆகியோருக்கும் கௌரவப் பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



Post a Comment