அத்துடன் கூடாரங்கள், மின்சார மின்விளக்குகள் மற்றும் மின்னூக்கி கேபிள் கம்பிகள் உள்ளிட்ட இரண்டு தொன் பிற நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்கள் லொறிகளில் ஏற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 'சாகர் பந்து' நடவடிக்கையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நிலைமைக்கு ஏற்ப மேலும் பல உதவிகள் மற்றும் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த நேரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவும், உறுதியாகவும் நிற்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment