11 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன. இந்திய அணி லீக் போட்டிகளில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி மற்றும் உகாண்டா அணிகளை வீழ்த்தியதுடன் அரையிறுதியில் ஈரான் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தைவான் அணிகள் மோதின. இதில் 35- 28 என்ற புள்ளிக்கணக்கில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இதுவரை பெண்கள் உலக கோப்பை தொடர்களில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும், ஆசிய விளையாட்டுகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தையும், ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5வது முறை பட்டத்தையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.
அரையிறுதியில் ஈரானை வீழ்த்தி இந்தியாவும், பங்களாதேஷை வீழ்த்தி சீன தைபே அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 35-28 என்ற புள்ளி கணக்கில் சீனை தைபே அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.
Post a Comment