Ads (728x90)

இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.

இந்த நிதி மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த 1.8 மில்லியன் நிதியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பின் அனர்த்த அவசர நிதியத்தின் மூலம் அனுப்பப்படும் 500,000 யூரோவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய நிவாரணம், பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் அவசர உதவிகளை வழங்குவதன் மூலம், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நிற்கிறோம் என்று அனர்த்தத் தயார்நிலை, நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லஹ்பிப் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிவில் பாதுகாப்புப் பொறிமுறை மூலம் பொருட்களின் அடிப்படையிலான உதவிகளையும் இலங்கைக்கு வழங்குகிறது.

இதில் ஜேர்மனி 4,600 தங்குமிடப் பொருட்களையும், பிரான்ஸ் 3,400 தங்குமிடப் பொருட்களையும் வழங்கியுள்ளன.

அத்துடன் இத்தாலி பொறியியல் நிபுணர்கள் குழுவை அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget