Ads (728x90)

இலங்கையின் மீட்பு செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்சே தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தித்வா சூறாவளியால் நாடு முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பேரிடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய ஒரு முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்துள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி இலங்கை செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலையில், ஐ.நா. மற்றும் பிற உள்ளூர், சர்வதேச பங்காளிகள் பல துறைகளில் தமது ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் ஐ.நா. ஏற்கனவே 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளதாகவும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் எதிர்வரும் மாதங்களில் மேலும் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget