அவசர உதவியின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு விமானம் 65 மெட்ரிக் தொன் எடையுள்ள 110 அடி நீள பெய்லிப் பாலத்தையும் (Bailey Bridge), ஒரு JCB பெக்கோ லோடர் இயந்திரத்தையும் ஏற்றி வந்தது.
இந்த பொதியுடன் இந்திய இராணுவ பொறியியலாளர் படையைச் சேர்ந்த பதின்மூன்று பொறியியலாளர்கள் உதவி வழங்குவதற்காக வந்துள்ளனர்.
இந்த நிவாரணப் பொதியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்காக, இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பொறியியலாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment