கடந்த போகத்தில் சேகரிக்கப்பட்ட நெல்லை லங்கா சதொச விற்பனை வலையமைப்பு மற்றும் ஏனைய பெயரிடப்பட்ட விற்பனை வலையமைப்புகளுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், குறிப்பாக பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்களையும் இதில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து 'நாட்டரிசி மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும் என்றும், அவ்வாறு பெறப்படும் நாட்டு நெல் 125 ரூபாய் என்ற பரிந்துரைக்கப்பட்ட விலையில் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை பிராந்திய அலுவலகங்கள், சதொச தலைமை அலுவலகம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் இதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment