Ads (728x90)

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் வினாடிக்கு 17,500 கன அடி நீர் ரந்தெனிகல நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மணித்தியாலங்களாக இவ்வாறு திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள், எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கும் இதே நிலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget