Ads (728x90)

தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை கல்வி அமைச்சும், யுனிசெப் (UNICEF) நிறுவனமும் இணைந்து முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்சரிவு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடமாற்றவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தித்வா சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல தேசிய பாடசாலையை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மண்சரிவு காரணமாகக் கடும் சேதங்களுக்கு உள்ளான பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையையும் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget