Ads (728x90)

வெளிநாட்டில் பணிபுரிவோர் இலங்கைக்கு மேற்கொண்ட பண அனுப்பல் நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது என இலங்கை மத்திய வங்கியின அறிக்கையில் பதிவாகியுள்ளது. 

இதற்கமைய 2025 ஜனவரி – நவம்பர் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணவனுப்பல் 7.19 பில்லியன் டொலராகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20.7 சதவீத அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget