விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் குயின்டன் டி கொக் அதிகபட்சமாக 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் 271 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 39.5 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் யசஷ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 116 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

Post a Comment